ஊத்தங்கால் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஊத்தங்கால் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சியில் ஊத்தங்கால் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று மனு அளித்தனர்.
அதன்பிறகும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊத்தங்கால் கிராம பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலத்தூர் தாசில்தார் சீனிவாசன், வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது தாசில்தார் சாலை மறியலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது பொதுமக்கள் தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஒரு வாரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.