மணப்பாறை அருகே 2-வது நாளாக அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் சிறுவன் காயம்
மணப்பாறை அருகே 2-வது நாளாக அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதில் சிறுவன் காயம் அடைந்தான்.
மணப்பாறை,
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி யில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுவதால் பெரும்பாலான பஸ்கள் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த ராஜா என்பவர் காயம் அடைந்தார். இதேபோல் நேற்று மதியம் மணப்பாறையில் இருந்து பாலக்குறிச்சி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கல்வீசி தாக்குதல்
மணப்பாறையை அடுத்த கிழவன்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, யாரோ மர்மநபர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியில் கல்வீசி தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் கண்ணாடி உடைந்ததில் இரட்டியபட்டியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 16) என்ற சிறுவன் காயம் அடைந்தான். இதனையடுத்து பஸ் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்மநபரை தேடி வருகின்றனர்.