போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் புதுக்கோட்டையில் 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை. மேலும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த தனியார் பஸ்சை நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.;
புதுக்கோட்டை,
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர், ஆலங்குடி, பொன்னமராவதி ஆகிய போக்குவரத்து பணிமனைகளில் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் அண்ணா தொழிற்சங்கத்தினர் உதவியுடன் சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
போலீசார் பாதுகாப்பு
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் நகர பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். மேலும் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆய்வு
இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதிகளில் இயக்கப்படும் தனியர் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்பிரமணியன், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு ஆகியோர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பஸ் பறிமுதல்
அப்போது தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் இந்த பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு சோதனை செய்ததில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்த தனியார் பஸ்சை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
டிரைவர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் புதுக்கோட்டையில் இருந்து வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்களுக்கு தெரிந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை போனில் அழைத்து அவர்கள் வர மறுத்துவிட்ட நிலையில் மாற்று ஏற்படாக தனியார் டிரைவர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க முடிவு செய்தனர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதி அடைந்தனர்.
பஸ்கண்ணாடிகள் உடைப்பு
இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டை போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்த ஒரு புறநகர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை மர்மநபர்கள் சிலர் உடைத்து உள்ளனர். இதைப்போல கறம்பக்குடியில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் பின்பக்க கண்ணாடியையும் மர்மநபர்கள் சிலர் உடைத்து உள்ளனர்.