ஜெர்மனி பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகளை அடையாளம் காண 17 பேரின் புகைப்படங்கள் அனுப்பி வைப்பு

சென்னை,
ஜெர்மனி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சந்தேக நபர்கள் 17 பேரின் புகைப்படங்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
மாமல்லபுரம் சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்ற பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் கடற்கரையில் 2 மர்மநபர்கள் அங்குள்ள சவுக்கு தோப்புக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மேற்பார்வையில், தனிப்படை போலீஸ் இன்பெக்டர்கள் சிரஞ்சீவி, கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி பல இடங்களுக்கு சென்று வந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் படங்களையும் தகவல்களையும் திரட்டி ஜெர்மனி நாட்டு பெண்ணுக்கு அனுப்பினர். ஆனால் இதில் உள்ள யாரும் குற்றவாளி களாக அடையாளம் காணப்படவில்லை.
புகைப்படங்கள் அனுப்பி வைப்பு
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் ஆக்ரா, டெல்லி, சிம்லா, வாரணாசி ஆகிய நகரங்களில் மேற்கொண்ட சுற்றுலா பயணத்தை முடித்து கொண்டு ஜெர்மனி சென்று விட்டார். தற்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பிக்க அவ்வப்போது சந்தேக நபர்களின் புகைப்படங்களை அவருக்கு வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பி அடையாளம் கேட்டு வருகின்றனர். தற்போது போலீசார் சேகரித்த 17 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி அடையாளம் காண்பிக்க வலியுறுத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் துவண்டு விடாமல் வெளிநாட்டு பெண் மிகவும் மனதைரியத்துடன் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.