ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்

திருச்சுழி அருகே நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் மறியலில் ஈடுபட்டனர்

Update: 2017-05-16 17:17 GMT
திருச்சுழி,

 திருச்சுழி அருகே பி.தொட்டியாங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் வேலை செய்கின்றனர்.

 இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாமலும், கடந்த சில தினங்களாக வேலைக்கான புதிய அட்டைகள் வழங்கப்படாமலும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கிராமத்தில் குடிதண்ணீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

சாலை மறியல்

 இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்க படவில்லை எனக்கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை–பண்ணை மூன்றடைப்பு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சுழி ஒன்றிய செயலாளர் அன்புச்செல்வன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

 தகவல் அறிந்த திருச்சுழி போலீஸ்ஈன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் நடந்த மறியல் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்