சித்தூரில், கங்கையம்மன் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் தரிசனம் முன்னாள் எம்.எல்.ஏ.,சி.கே.பாபு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்
சித்தூரில் பல்வேறு இடங்களில் கங்கையம்மன் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
சித்தூர்
சித்தூர் பஜார்வீதியில் கங்கையம்மன் திருவிழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் கங்கையம்மன் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளி மற்றும் தங்க கவசங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்புப்பூஜைகள் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அதில், சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கங்கையம்மன் திருவிழா கமிட்டி தலைவருமான சி.கே.பாபு, விழா குழுவினருடன் தாம்பூல தட்டுகளில் மேற்கண்ட மங்கள பொருட்களை வைத்து, தலையில் சுமந்தவாறு மேள தாளம், கேரள செண்டை மேளம் மற்றும் வாண வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, கங்கையம்மனுக்கு சமர்ப்பணம் செய்தார். சி.கே.பாபு மற்றும் அவரின் மனைவி, கங்கையம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பித்தனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
விழாவில் 850–க்கும் மேற்பட்ட ஓம்சக்தி பக்தர்கள் கரகம், காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் அருள் வந்து ஆடியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கடும் வெயிலால் பக்தர்கள் அவதிப்படாமல் இருக்க, வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, சாலைகளில் தெளிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
விழாவில் சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமிநாயுடு, சித்தூர் மாநகர மேயர் கட்டாரி ஹேமலதா, மாவட்ட ஜில்லா பரிஷத் தலைவர் கீர்வாணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
கடும் வெயிலை பொருட்படுத்தாமல் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, அம்மன் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் இருந்து நீண்ட தூரத்துக்கு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் பெண் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ்வார்த்தும் அம்மனை வழிபட்டனர். கங்கையம்மன் திருவிழாவையொட்டி நகரில் வாகனப் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மோர், பானகம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் சித்தூரில் கிரீம்பேட்டை, தொட்டிப்பள்ளி, சந்தைப்பேட்டை, முருக்கம்பட்டு ஆகிய பகுதிகளில் கங்கையம்மன் திருவிழா நடந்தது. இன்று (புதன்கிழமை) வதம் செய்யப்பட்ட கங்கையம்மன் உருவத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து கட்டமெஞ்சி ஏரியில் கரைக்கப்படுகிறது. எனவே சித்தூர் நகரில் இன்று மதியம் 2 மணியில் இருந்து மாலை 6 மணிவரை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது என மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.