தேனி மாவட்டம் முழுவதும் 56 சதவீத அரசு பஸ்கள் இயங்கின தற்காலிக டிரைவர்கள் நியமனம்
மாவட்டம் முழுவதும் 56 சதவீத அரசு பஸ்கள் நேற்று இயங்கின. தற்காலிக டிரைவர்கள் நியமனம் செய்யப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன.
தேனி
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 2–வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. வேலைநிறுத்தம் காரணமாக அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், பழனிசெட்டிபட்டி, தேவாரம், போடி, கம்பம்–1, கம்பம்–2, லோயர்கேம்ப் ஆகிய 7 இடங்களில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் அமைந்து உள்ளன. இந்த பணிமனைகளில் மொத்தம் 409 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று 231 பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி சுமார் 56 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
காலையில் குறைவு
காலை நேரத்தில் பஸ் போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. காலை 10 மணி நிலவரப்படி அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து மொத்தம் 322 பஸ்கள் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் 171 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதேபோல், பகல் 11 மணிக்கு 334 பஸ்கள் வெளியேற வேண்டிய நிலையில், 186 பஸ்கள் மட்டுமே வெளியேறின. இதனால் காலை நேரத்தில் அரசு பஸ்கள் குறைவாகவும், அதே நேரத்தில் தனியார் பஸ்கள் அதிக அளவிலும் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்ட போதிலும் தனியார் பஸ்கள் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்தது.
வழக்கமாக 70 தனியார் பஸ்கள் இயக்கப்படும் நிலையில், நேற்று சுமார் 140 பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களை பொறுத்தவரை வெளியூர்களுக்கு செல்லும் சொகுசு பஸ்களும் இயக்கப்பட்டன. மதுரை, திண்டுக்கல் பகுதிகளுக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் சென்று கொண்டு இருந்தன.
பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனுக்குடன் பஸ் ஏறிச் செல்லும் நிலைமை உருவானது.
தற்காலிக டிரைவர்கள்
பஸ் நிலையங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேனி புதிய பஸ் நிலையத்திற்குள் மினி பஸ்களும் அனுமதிக்கப்பட்டன. தேனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்களோடு சேர்த்து மினிபஸ்களும் இயக்கப்பட்டன.
அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அதிக அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 120–க்கும் மேற்பட்ட தற்காலிக டிரைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் காக்கி சீருடை அணிந்தும், சிலர் வெள்ளைநிற சீருடை அணிந்தும் பஸ்களை ஓட்டினர். சிலர் சீருடை அணியாமல் சாதாரண ஆடை அணிந்து பஸ்களை ஓட்டினர்.
தனியார் பஸ்களில் கூட்டம்
அரசு பஸ்கள் குறைவாகவும், தனியார் பஸ்கள் அதிகமாகவும் இயக்கப்பட்ட நிலையில் தனியார் பஸ்களில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அரசு பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஒரே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்த போதிலும் தனியார் பஸ்களில் தான் மக்கள் ஆர்வத்துடன் ஏறினர். அரசு பஸ்களில் பயணம் செய்யும் போது பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாக தகவல் பரவியது. இதன் விளைவாக அரசு பஸ்களை புறக்கணித்து தனியார் பஸ்களில் செல்ல மக்கள் ஆர்வம் காட்டினர்.