காவல்கிணறு தூய உபகாரமாதா ஆலய திருவிழா 15–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

பணகுடி அருகே காவல்கிணறு தூய உபகாரமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-05-16 20:00 GMT
பணகுடி,

பணகுடி அருகே காவல்கிணறு தூய உபகாரமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் தூய உபகாரமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா கடந்த 15–ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜெபமாலை மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடந்தது. ஒவ்வொரு நாளிலும் காலை 5 மணிக்கு திருயாத்திரை மற்றும் திருப்பலி ஒவ்வொரு மண்டலம் சார்பில் நடைபெறுகிறது. 8–ம் திருவிழா மும்பை வாழ் காவை மக்கள் சார்பிலும், 9–ம் திருவிழா பங்கு மேய்ப்பு பணிக்குழு மற்றும் மண்ணின் மைந்தர்கள் சார்பிலும், 10–ம் திருவிழா அன்னையின் பாசக்குழந்தைகள் சார்பிலும் நடக்கிறது.

தேர்ப்பவனி

9–ம் திருவிழாவான வருகிற 23–ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், தேர்ப்பவனியும் நடக்கிறது. 10–ம் திருவிழாவான வருகிற 24–ந் தேதி (புதன்கிழமை) காலை 5 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா பாடல் திருப்பலியும், உறுதி பூசுதல் அருள் விழாவும், தேர்ப்பவனியும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11–ம் திருவிழாவான வருகிற 25–ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள் தலைமையில் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்