சி.பி.ஐ., வருமான வரித்துறைகள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படக் கூடாது நெல்லையில், உ.வாசுகி பேட்டி
சி.பி.ஐ., வருமான வரித்துறைகள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படக் கூடாது என நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
நெல்லை,

இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம்
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட வில்லை. பல முறை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பின்னர் இறுதி கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதால், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவு கொண்டு வர தேவைப்பட்டால், எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினையில் சரியான முறையில் அணுகாததால் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளது. இந்த பிரச்சினையை சரியான முறையில் அணுகாத தமிழக அரசு மீது தான் எஸ்மா சட்டம் பாய வேண்டும்.
மத்திய அரசின் கைப்பாவைகளாக...
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. போலீசார் நேற்று சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் எந்த அடிப்படையில் சோதனை நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் வருவான வரித்துறை, சி.பி.ஐ. போன்றவைகள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர், நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார். நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வாசுகி, “இந்துத்துவா பொய்மையின் உருவாக்கம்“ என்ற தலைப்பில் பேசினார். “வகுப்பு வாதத்தின் பல்முனை தாக்குதல்“ என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கமும், “தமிழகத்தில் இந்துத்துவா சவால்கள்–மாற்று“ என்ற தலைப்பில் குணசேகரன் பேசினார்.
கருத்தரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் முருகேசன் (குமரி), ராமகிருஷ்ணன் (மதுரை புறநகர்), அர்சுணன் (தூத்துக்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.