தர்மபுரி பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு பயணிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்
தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது
தர்மபுரி,
அரசு போக்குவரத்துகழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். நேற்று 2–வது நாளாக இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நேற்று நிறுத்தப்பட்டிருந்தன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பஸ்களை இயக்க கலெக்டர் விவேகானந்தன் உத்தரவுப்படி போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று தர்மபுரி பஸ் நிலையத்தில் பஸ்களின் இயக்கப்படுவது குறித்து நேற்று 2–வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கலெக்டர் விவேகானந்தன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பஸ்நிலையத்தில் இருந்த பயணிகளிடம் பஸ்களின் இயக்கம் தொடர்பாக கோரிக்கைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:–
160 வழித்தடங்கள்
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முறையே 253 அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். இவற்றில் 181 பஸ்கள் காலை நிலவரப்படி இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை இடையூறு ஏற்படாத வகையில் இயக்கும் பணியில் டிரைவர்கள், கண்டக்டர்கள் என 202 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் தனியார் வாகன டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் என 160 பேர் பஸ்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். புறநகர் பஸ்கள் மாவட்டத்தில் உள்ள 160 வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களில் அரசு பஸ்களின் இயக்கம் குறித்து வருவாய்த்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் பயணிகள், பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகள், பொதுமக்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் 1077, 18004251071, 18004257016 ஆகிய தொலைபேசி எண்களிலும், 8903891077 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகாருக்குள்ளாகும் தனியார் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் ராமமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மாவட்ட கூட்டுறவு பணியாளர் கடன் சங்க தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.