அரசு பஸ் மீது லாரி மோதல்; 4 பேர் படுகாயம்- டிரைவர் கைது

நொய்யல்,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள கொங்கு நகர் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஈரோட்டை சேர்ந்த ஜெயனூல்அப்தின்(வயது 55), குப்புசாமி(60), கொடுமுடியை சேர்ந்த கந்தம்மாள்(50), முள்ளிப்பாடியை சேர்ந்த பானுமதி(44) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியை சேர்ந்த சண்முகம்(36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.