சயான் கோலிவாடாவில் பரிதாபம்; மாநகராட்சி குப்பை லாரி மோதி சென்னையை சேர்ந்தவர் பலி
மும்பை சயான்கோலிவாடாவில் மாநகராட்சி குப்பை லாரி மோதி சென்னையை சேர்ந்தவர் உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை சயான் கோலிவாடா, மக்காவடி பகுதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம் ஏழுமலை (வயது52). இவரது சொந்த ஊர் சென்னை ஆகும். இவர் நேற்று காலை 10.30 மணியளவில் சாப்பிடுவதற்காக மக்காவடி கடை தெருவில் உணவு வாங்கி கொண்டு வீடு திரும்புவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள எச்.எம்.சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது.
சாலையில் நிலைகுலைந்து விழுந்த ஆறுமுகம் ஏழுமலை மீது லாரி சக்கரம் ஏறியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
டிரைவர் கைது
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தை ஏற்படுத்திய குப்பை லாரி டிரைவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மேலும் விபத்து பற்றி அண்டாப்ஹில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகம் ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய குப்பை லாரி டிரைவரையும் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ஆறுமுகம் ஏழுமலைக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், உமா, சித்ரா என்ற மகள்களும், கணேஷ் என்ற மகனும் உள்ளனர்.