புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை, போலீசார் விசாரணை
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்த பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி
புதுவை கதிர்காமம் ஆனந்தாநகர் இளங்கோ வீதியில் உள்ள கணபதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரேஷ்மி (வயது27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருடைய தாயார் ஷாலினி. இவர்களுடைய சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூர். ரேஷ்மி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்தார். கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. (மயக்க மருந்து நிபுணர்) படித்தார். பின்னர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலேயே டாக்டராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ரேஷ்மியின் தாயார் ஷாலினி மைசூருக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று அதிகாலை ரேஷ்மியின் செல்போனுக்கு அவர் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை ரேஷ்மி எடுக்கவில்லை. இதனால் தூங்கி எழுந்திருக்கவில்லை என்று கருதி ஷாலினி விட்டு விட்டார்.
பூட்டிக் கிடந்த கதவு
இந்தநிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் ரேஷ்மி ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. இதனால் அவருடன் பணிபுரியும் சக டாக்டர்கள் ரேஷ்மியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்து அந்த டாக்டர்கள், ரேஷ்மியின் தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அவர் பதிலளிக்கையில், நானும் காலையில் செல்போனுக்கு அழைத்தேன். ரேஷ்மி போனை எடுக்கவில்லை என்றார். உடனே ரேஷ்மியுடன் பணிபுரியும் சக டாக்டர்கள், அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அவருடைய வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ரேஷ்மி உள்ளே இருக்கிறார் என நினைத்து கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் மேலும் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
விஷ ஊசி போட்டு சாவு
அப்போது ரேஷ்மி அவருடைய அறையில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். உடனே அவரை அங்கிருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்தபோது ரேஷ்மி இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரேஷ்மி விஷ ஊசிப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
ரேஷ்மி சாவுக்கான காரணம் என்ன? காதல் தோல்வியா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரேஷ்மி தற்கொலை குறித்து அவருடைய தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.