கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை - கொள்ளை வழக்கு: விபத்தில் பலியான கனகராஜின் அண்ணனிடம் 4 மணிநேரம் போலீஸ் விசாரணை
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை - கொள்ளை வழக்கு: விபத்தில் பலியான கனகராஜின் அண்ணனிடம் 4 மணிநேரம் போலீஸ் விசாரணை, தம்பியின் சாவில் மர்மம் உள்ளதாக பேட்டி
கோத்தகிரி
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் விபத்தில் பலியான கனகராஜின் அண்ணனிடம் 4 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து அவர், தனது தம்பி கனகராஜ் சாவில் மர்மம் உள்ளதாக கூறினார்.
கோடநாடு எஸ்டேட் கொலை-கொள்ளை வழக்கு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. அங்குள்ள பங்களாவில் கடந்த மாதம் 24-ந்தேதி நடந்த காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட 11 பேரில், இதுவரை 8 பேர் கைதாகி உள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீசார் கூறும், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் உள்ள அவரது சித்தி வீட்டுக்கு சென்று விட்டு, பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது அங்குள்ள புறவழிச்சாலையில் கார் மீது மோதி பலியானார். இவரது கூட்டாளியான சயன் என்பவரும் மற்றொரு விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்த வழக்கில் அரசியல் பின்னணி ஏதும் இருக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
4 மணிநேரம் விசாரணை
இந்த நிலையில் பரபரப்பான இந்த வழக்கு தொடர்பாக கோத்தகிரி போலீசார், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்ரபாளையத்தை சேர்ந்த கனகராஜின் அண்ணன் தனபாலை பலமுறை விசாரணைக்காக கோத்தகிரிக்கு அழைத்தனர். ஆனால் சம்மன் எதுவும் வழங்கப்படாததால் விசாரணைக்கு வர அவர் மறுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனபாலை கோத்தகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வர சம்மன் அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று அழைத்து வரப்பட்ட தனபாலிடம் சுமார் 4 மணி நேரம் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாவில் மர்மம்
கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் அரசின் தலையீடு உள்ளது. இந்த சம்பவத்திற்கும் எனது தம்பி கனகராஜூக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் எனது தம்பி இந்த சம்பவத்தில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். எனது தம்பியின் மரணம் விபத்து என்று போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது சாவில் மர்மம் உள்ளது. அந்த சம்பவம் நடந்த இடத்தில் விபத்து நடந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. இதற்கான விசாரணை சரியான நிலையில் நடைபெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
அரசியல் எதிரி
எடப்பாடி மற்றும் சேலம் தொகுதியைப் பொறுத்த வரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்தகைக்கு எடுத்ததைப் போல செயல்பட்டு வருகிறார். எம்.பி. பதவியானாலும் எம்.எல்.ஏ. பதவியானாலும் அவருடையதாக கருதி வருகிறார். எனது அரசியல் எதிரியாக செயல்பட்டு வருபவர் தற்போது தமிழக முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி தான். நான் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ சீட்டுக்கும், மற்றும் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்டும் அவர் எனக்கு தரவில்லை. எனவே எனக்கு அரசியல் எதிரி அவர்தான்.
தெளிவு படுத்த வேண்டும்
எனது தம்பி கனகராஜ் விபத்தில் மரணமடைந்ததற்கும், ஏற்கனவே 2011-ம் ஆண்டு எங்களின் கட்சிக்காரர் சரவணன் என்பவர் விபத்தில் இறந்ததற்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எனக்கு உள்ளது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எனது தம்பி கனகராஜ் இறப்பு குறித்து அறிக்கை வெளியிட்டும் கூட, இதுவரை அந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ள நிலையில் மறுப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் கூறவில்லை. அதில் சம்பந்தம் இல்லாத பட்சத்தில் அதை தெளிவுப்படுத்த வேண்டும் அல்லவா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அவரது மற்றொரு தம்பி பழனிவேல், சித்தி மகன் ரமேஷ், அத்தை மகன் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.