பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி
அரியலூர் மாவட்டங்களில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு போக்குவரத்துக்கழக கிளை பணிமனையிலிருந்து பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரியலூர்,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக அரசு சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களான தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்டவை ஒன்றிணைந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை தொடங்கினர். இதனால் பெரம்பலூர் துறைமங்களம் பகுதியில் உள்ள அரசுபோக்குவரத்து கழக கிளை பணிமனையில் இருந்து அரசு பஸ்களை இயக்குவதற்காக டிரைவர்கள், கண்டக்டர்கள் வரவில்லை. இதனால் பஸ்கள் பணிமனையில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் ஊழியர்கள் பணிமனையின் முன்பு நின்று கொண்டிருந்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பணிமனையின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பயணிகள் அவதி
பெரம்பலூர் கிளைபணிமனையில் இருந்து புறநகர் பஸ்கள், டவுன் பஸ்கள் என 110 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு பஸ்கள் அரியலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், சேலம், திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்ததால் பயணிகளின் போக்குவரத்திற்கு வசதியாக இருந் தது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் தனியார் பஸ்கள் மட்டும் இயங்கியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் வருவாய்துறையினர், போலீசார் ஆகியோர் பெரம்பலூர் கிளை பணிமனைக்கு வந்து மாற்று டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் சில பஸ்களை வெளியே கொண்டு வந்து இயக்கினர். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த போராட்டக்காரர்கள் சிலர் பஸ் இயக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் அரசு பஸ்களை இயக்குவதற்காக அங்கு மும்முரமாக இருந்தனர். இதனால் இருதரப்பு மோதல் உருவாகும் சூழல் உருவாகியிருந்தது. இந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வெளியே நின்று கொண்டிருந்தவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
தனியார் பஸ்களின் டிக்கெட்விலை பற்றி...
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று டிரைவர்கள் மூலம் சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களுக்கு பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக் கள் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதை பயன்படுத்தி கொண்டு டிக்கெட் விலையை கூடுதலாக்கி பஸ் இயக்கப்படுகிறதா? என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பெரம்பலூர் பாலக்கரை, வெங்கடேசபுரம் பகுதிகளில் சென்று கொண்டிருந்த 2 டவுன் பஸ்கள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அரியலூர் மாவட்டத்திலும்...
அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள அரசுபோக்குவரத்து கழக கிளை பணிமனையில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அரசு பஸ்களை இயக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் முன்வரவில்லை. அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்று டிரைவர்கள் மூலம் அரியலூர் கிளை பணிமனையில் இருந்து ஒருசில பஸ்களை இயக்க ஏற்பாடு செய்தனர். பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் தனியார் மற்றும் மினிபஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிந் தது. கிராமப்புற பகுதிகளுக்கு அரசு டவுன்பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் தினசரி கூலிவேலைக்கு செல்வதற்கும், சிறுவியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதே போல் ஜெயங்கொண்டம் அரசுபோக்குவரத்துக்கழக கிளைபணிமனையிலிருந்தும் புறநகர் பஸ்கள், டவுன்பஸ்கள் இயக்கப்படாததால் ஜெயங்கொண்டம் பஸ்நிலையம் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன.
ரெயில் நிலையத்தில் மக்கள்கூட்டம்
பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அரியலூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இதனால் திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கும், விருத்தாசலம், விழுப்புரம், கடலூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் செல்ல பொதுமக்கள் ரெயில் மூலமாக போக்குவரத்தினை மேற்கொண்டனர். ரெயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக ரெயில்வே போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.