காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குத்தாலத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்,
குத்தாலம் ரெயில் நிலையத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. குத்தாலம் ரெயில் நிலையத்தில் காலை 11.40 மணிக்கு மயிலாடுதுறை– நெல்லை பாசஞ்சர் ரெயில் வந்து நின்றது. அப்போது விவசாயிகள் மற்றும் காவிரி உரிமை மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி தீர்ப்பாயம் காலாவதியாகும் வகையில் நதிநீர் பிரச்சினையை தீர்க்க புதிதாக கொண்டுவரப்பட உள்ள ஒற்றை தீர்ப்பாயம் அமைப்பது என்ற புதிய சட்ட திருத்தத்தை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
16 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன், சண்முகம், தமிழன்பன், பெரியசாமி உள்பட 16 பேரை கைது செய்தனர். இந்த மறியலால் நெல்லை பாசஞ்சர் ரெயில் ¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.