புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை சூறையாடிய 3 பேர் கைது
கோவை அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் சூறையாடினர். இதில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர்
நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்திலும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் தமிழக அரசு மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமப்புறங்களிலும், குடியிருப்புகள் அருகிலும் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து கணுவாய் செல்லும் ரோட்டில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கடைக்கு எதிராக 2 முறை வடமதுரை- தடாகம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்தனர். அப்போது அந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் கடந்த 10-ந் தேதி பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது.
மதுக்கடை சூறை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மதுக்கடை முன்பு திரண்டனர். அப்போது அங்கு மின்வசதி இல்லாமல் மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் மூலமாக மது விற்பனை நடந்து கொண்டு இருந்தது. இதையடுத்து ஆவேசம் அடைந்த பொதுமக்கள் திடீரென்று மதுக்கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை வெளியே எடுத்து வீசி கடையை சூறையாடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார், அங்கிருந்த 15 பேரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து அந்த மதுக்கடையின் மேற்பார்வையாளர் நாகராஜ், ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 432 மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மதுக்கடையை சூறையாடியதாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் (வயது 53), பாலாஜி (31), கோவிந்தராஜ் (61) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், நரசிம்மராஜ், கோபால், சுதாகர், கனகராஜ், குணசேகரன், சுகுமார், சரவணன், குட்டி, சந்திரசேகர், உதயகுமார், கோபாலகிருஷ்ணன் ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கலெக்டரிடம் எம்.எல்.ஏ. மனு
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தடாகம் பகுதி விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பி.ஆர்.ஜி. அருண் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதையடுத்து அவர், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், அந்த பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது என்று மனு அளித்தார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ஹரிகரன் தெரிவித்தார். இதையடுத்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.