மாவட்டம் முழுவதும் 56 சதவீதம் அரசு பஸ்கள் இயங்கவில்லை, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தேனி மாவட்டத்தில் 56 சதவீதம் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தேனி,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.
இதனால் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்களை நேற்று முன்தினம் மாலையில் இருந்தே போக்குவரத்து பணிமனைகளுக்கு கொண்டு வந்து டிரைவர்கள் நிறுத்தினர். இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்காக தேனி பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பஸ் கிடைக்காமல் பரிதவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு திருப்பூர், கோவை போன்ற பகுதிகளுக்கு செல்ல பயணிகள் பலர் காத்திருந்தனர். அவர்கள் பயணம் செய்வதற்காக தனியார் பஸ்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதன்படி தனியார் பஸ்களில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கும், பஸ் நிலையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையில் திட்டமிட்டபடி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
56 சதவீதம் இயங்கவில்லை
தேனி மாவட்டத்தில் பெரியகுளம். தேவாரம், பழனிசெட்டிபட்டி, போடி, லோயர்கேம்ப், கம்பம்1, கம்பம்2 என மொத்தம் 7 இடங்களில் அரசு போக்குவரத்து பணிமனைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து தினமும் 409 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். நேற்று பகல் 12 மணியளவில் 181 பஸ்கள் மட்டுமே பணிமனைகளை விட்டு வெளியேறின.
மற்ற பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. 44 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 56 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. அதே போல் வெளி மாவட்டங்களில் இருந்து தேனிக்கு வழக்கமாக வரும் அரசு பஸ்களில் சுமார் 65 சதவீதம் பஸ்கள் நேற்று வரவில்லை.
தனியார் பஸ்கள்
குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் வழக்கமாக 70 தனியார் பஸ்கள் இயக்கப்படும். நேற்று 110 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தனியார் பஸ்களுக்கு நேற்று நேரம் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பஸ்நிலையம் வந்து செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டதால் தனியார் பஸ்கள் பஸ் நிலையம் வந்ததும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வண்ணம் இருந்தன.
மக்கள் பாதிப்பு
காலை நேரத்தில் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பிற்பகலில் கூட்டம் குறைவாக இருந்தது. தேனியில் இருந்து திருச்சி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தான் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் இதுபோன்ற நகரங்களுக்கு சென்ற பயணிகள் பாதிக்கப்பட்டனர். பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இந்த வேலைநிறுத்தம் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.