அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக, தேனியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தளர்ந்த கட்டுப்பாடுகள்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. அதை ஈடு செய்யும் வகையில் தனியார் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதோடு, தனியார் பஸ்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
இதனால் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் இயக்கப்பட்டன. தேனி மாவட்டத்திற்குள் இயக்கப்பட்ட பஸ்களில் வழக்கமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால் வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
அதிக கட்டணம்
தேனியில் இருந்து திருப்பூருக்கு வழக்கமான கட்டணம் ரூ.105 ஆகும். ஆனால் தனியார் பஸ்களில் ரூ.200 வசூல் செய்யப்பட்டது. அதுபோல் மதுரை, திண்டுக்கல், பழனி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்களிலும் வழக்கமான கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக வசூல் செய்யப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டி னர். இந்த கூடுதல் கட்டணம் வசூலால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.