நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

Update: 2017-05-15 18:58 GMT
நாமக்கல்,

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று சந்தைபேட்டைபுதூர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடந்தது. ஏராளமான பெண்கள் பூக்கூடைகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பல்வேறு பூக்களை கொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பூக்களால் கூடாரவள்ளி அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்