ஓமலூர் அருகே பரிதாபம்: ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கிணற்றில் தவறிவிழுந்து சாவு

ஓமலூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2017-05-15 18:56 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரி காட்டுவளவைச் சேர்ந்தவர் கோபால். விவசாயி.

இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 27). இவர் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தார்.

கிணற்றில் தவறிவிழுந்து சாவு

நேற்று காலை 7 மணியளவில் வெங்கடேஷ், தங்களுக்கு சொந்தமான நிலத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது? என தெரிந்து கொள்வதற்காக கிணற்றை எட்டிப்பார்த்து உள்ளார். அப்போது கிணற்றில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்துபோன வெங்கடேசுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தாமரைச்செல்வி என்ற மனைவியும், ஹரிகரன் என்ற கைக்குழந்தையும் உள்ளது.

மேலும் செய்திகள்