பஸ் ஸ்டிரைக் எதிரொலி ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
பஸ் ஸ்டிரைக் காரணமாக ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மதுரை
தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தால் நேற்று முன்தினம் மாலை முதல் பஸ்கள் ஓடவில்லை. அதனை தொடர்ந்து தவிப்புக்கு ஆளான பொதுமக்கள் ரெயில்நிலையங்களுக்கு படையெடுக்கத்தொடங்கியுள்ளனர்.
இதனால், நேற்று முன்தினம் மாலை மதுரை–செங்கோட்டை, மதுரை–ராமேசுவரம், மதுரை–திண்டுக்கல், திருச்செந்தூர்–பாலக்காடு, மயிலாடுதுறை–நெல்லை ஆகிய பாசஞ்சர் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
அதேபோல, நேற்று காலை வழக்கம்போல, மதுரையில் இருந்து செங்கோட்டை, ராமேசுவரம், திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற பாசஞ்சர் ரெயில்களிலும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பயணம் செய்தனர். கோடை விடுமுறை என்பதால் சென்னை செல்லும், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
குறிப்பாக வெளியூர் பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரும் ரெயில்களிலேயே செல்கின்றனர். இதனால், மதுரை கோட்ட ரெயில்வேயின் பயணிகள் போக்குவரத்து வருமானமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயத்தில், பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்களும் ரெயில்களில் டிக்கெட் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.