திருநகர் பகுதியில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன், காருடன் கைது
திருநகர் பகுதியில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டி திருடிய கும்பலை சேர்ந்த ஒருவரை, போலீசார் திருட்டு காருடன் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 5–வது பஸ் நிறுத்தம் தங்கமணி தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் (வயது 60). இவர் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த டி.வி., கேமராக்கள், பணம் மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான ஒரு சொகுசு கார் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து கண்ணப்பன் திருநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் திருநகர் சவுபாக்கிய நகர் பகுதியில் சந்தேகப்படும்படி காருடன் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கைது
உடனே அந்த பகுதிக்கு சென்ற போலீசாரை பார்த்ததும், கும்பலில் இருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரை ஓட்டி வந்த சதீஷ் (வயது 27) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் திருநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருட்டு, வழிப்பறி செய்ததாக ஒப்புக்கொண்ட அவர், தான் ஓட்டி வந்தது நகை அடகு கடைக்காரரின் கார் என்பதையும், தப்பி ஓடியவர்கள் சக கூட்டாளிகள் என்றும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சதீசை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.