திறன்களை மூளைக்குள் ‘டவுன்லோடு’ செய்யும் தொழில்நுட்பம்!
நமக்கு தேவையான அறிவுத்திறன்கள் அல்லது குறிப்பிட்ட சில ஆற்றல்கள் போன்றவற்றை நீண்ட காலம் செலவழித்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது இனி அதற்கும் அவசியமில்லை.
நாம் வாழும் இந்த உலகம் இன்டர்நெட் எனும் இணையத்தளத்துக்குள் சுருங்கி பல வருடங்களாகிவிட்டன. இன்டர்நெட் மட்டும் இருந்துவிட்டால் போதும் இனி எதற்காகவும் நாம் வீட்டு வாசற்படியைக் கூட தாண்டிப்போக வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நமக்கு தேவையான அனைத்தையும் இன்டர்நெட்டில் ஆர்டர் செய்துவிட்டால் போதும், அவை நம் வீடு தேடி வந்துவிடும்.
நமக்கு தேவையான அறிவுத்திறன்கள் அல்லது குறிப்பிட்ட சில ஆற்றல்கள் போன்றவற்றை நீண்ட காலம் செலவழித்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது இனி அதற்கும் அவசியமில்லை. மாறாக, அவற்றை நேரடியாக நம் மூளைக்குள் தரவிறக்கம் அல்லது டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அச்சரியப்படுத்துகிறார்கள் அமெரிக்காவின் ராணுவ ஆய்வு மையமான ‘டர்பா’ (DARPA) என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த அமைப்பில் ‘பைத்தியக்கார அறிவியல் பிரிவு’ (விணீபீ science Branch) என்ற ஒரு ஆய்வுப்பிரிவு இருக்கிறது. அந்த பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இலக்கு நரம்பு உருவேற்கும் இயல்பு பயிற்சித் திட்டம் (Targeted Neuroplasticity Training (TNT) program) என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தனர்.
பாதுகாப்பான பல்வேறு நரம்புத் தூண்டுதல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, ‘சினாப்டிக் பிளாஸ்டிசிட்டி’ (synaptic plasticity) என்று அழைக்கப்படும், நரம்புகளுக்கு இடையிலான தொடர்புகளை தேவைகேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் இயற்கை நரம்பியல் நிகழ்வை தூண்டுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
சினாப்டிக் பிளாஸ்டிசிட்டி என்பது கற்றலுக்கு அத்தியாவசியமானது. மேலும், நரம்புத் தூண்டுதல் மூலம் தூண்டப்படும் சினாப்டிக் பிளாஸ்டிசிட்டி மூளையின் கற்கும் திறனை துரிதப்படுத்தும் என்றும் நம்புகிறது டர்பா ஆய்வு மையம்.
இத்தகைய நரம்புத் தூண்டுதல் முறையானது வெற்றி அடைந்துவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து ஒரு பாடலை அல்லது வீடியோவை நம் கணினிக்குள் டவுன்லோடு செய்துகொள்வது போல, பல்வேறு வகையான திறன்கள் அல்லது ஆற்றல்களை நம் மூளைக்குள் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
உதாரணமாக, நீங்கள் திடீரென்று ஜப்பான் அல்லது சீனாவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் ஜப்பானிய மொழியோ சீன மொழியோ உங்களுக்குத் தெரியாது. அத்தகைய சூழலில், அவ்விரண்டு மொழிகளையும் உங்கள் மூளைக்குள் டவுன்லோடு செய்துகொண்டால் போதும். அதாவது, கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இதுபோன்ற ஒரு தொழில்நுட்பம் சாமானியர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், இக்கட்டான சூழல்களில் புதிய திறன்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ள ராணுவ வீரர்களுக்கு உதவும் நோக்கத்திலேயே இந்த ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மொத்தம் 7 ஆய்வு நிறுவனங்களில் எட்டு ஆய்வுத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்துவருகிறது டர்பா. மூளையின் உருவேற்கும் இயல்புக்கு காரணமான அடிப்படை அறிவியல் நிகழ்வுகளை நரம்புத் தூண்டுதல் எப்படி தூண்டுகிறது என்பதை ஆய்வு செய்வதே இந்த 7 திட்டங்களின் நோக்கமாகும். இந்த திட்டங்கள் அனைத்தையும் நடைமுறைக்கு ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்ய, உலகின் மொழியியல் வல்லுனர்கள், புத்திக்கூர்மை ஆய்வாளர்கள் மற்றும் மனிதர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்த திட்டத்தின் ஆய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்கிறார் இந்த திட்டத்தின் மேலாளர் டக் வெப்பர்.
ஆக மொத்தத்தில், இந்த திட்டம் வெற்றி அடைந்தால், ஆற்றல் மற்றும் திறன்களை நேரடியாக மூளைக்குள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். கற்றல் மிகவும் வேகமாகவும், சுலபமாகவும் நிகழும். மனித இனம் அசாத்திய திறன்கொண்ட ஒரு உயர்ந்த நிலையை அடைந்து விடும்.