மருத்துவ துறையில் 171 டெக்னீசியன் பணிகள்
தமிழக மருத்துவ துறையில் டெக்னீசியன் பணிகளுக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழக, மருத்துவ சேவைப் பணிகள் ஆட்தேர்வு வாரியம் சுருக்கமாக எம்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பிளாஸ்டர் டெக்னீசியன் (கிரேடு-2) பணியிடங்களுக்கு 87 பேர், அனஸ்தீசியா டெக்னீசியன்- பணிகளுக்கு 77 பேர், இதயம் நுரையீரல் ஹைபோதெர்மியா மெஷின் டெக்னீசியன் பணிகளுக்கு 7 பேர் ஆகியோரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பிளஸ்-2 படிப்புடன், ஆர்தோபெடிக் டெக்னீசியன் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் பிளாஸ்டர் டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். பிளாஸ்டர் டெக்னீசியன் பணி விண்ணப்பதாரர்கள் 29-5-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதேபோல அனஸ்தீசியா டெக்னீசியன் பணிகளுக்கு மேல்நிலைக் கல்வியுடன் அனஸ்தீசியா டெக்னீசியன் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேல்நிலைக் கல்வியுடன், பம்ப் டெக்னீசியன் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் இதயம் நுரையீரல் ஹைபோதெர்மியா மெஷின் டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி 29-5-2017-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.