விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை

துணை ராணுவ படையில் 355 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பாகும்.

Update: 2017-05-15 07:12 GMT
இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்று சசாஸ்திரா சீமா பல். சுருக்கமாக எஸ்.எஸ்.பி. என அழைக்கப்படும் இந்த படைப்பிரிவு புது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த படைப் பிரிவில் கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 355 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். கால்பந்து, தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி, ஜூடோ, மல்யுத்தம், குத்துச்சண்டை ஜிம்னாஸ்டிக், டேக் வாண்டோ, வில்வித்தை உள்ளிட்ட 22 விதமான விளையாட்டுகளில் பங்கெடுத்து சாதனை படைத்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகள், சான்றிதழ்கள் பெற்று சாதித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:


உடல் அளவு, உடல்திறன் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். டி.டி. அல்லது இந்திய அஞ்சல் ஆணை, வங்கி காசோலையாக இந்த கட்டணத்தை இணைக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கம் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் சுய சான்றொப்பம் செய்த புகைப்படங்கள், சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் Assistant Direct or (Sports) Force Hqr., Sashas tra Seema Bal (SSB), East Bloc kV, R.K.Puram, New Delhi 110066 என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். அஞ்சல் முகப்பில் App lication For The Post Of Con stable (GD) Under Sports Quota 2016&17 & 2017&18 என்று குறிப்பிட வேண்டும். இதற்கான அறிவிப்பு மே 6-12 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். விரிவான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்