பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தமிழக அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம், பயணிகள் கடும் அவதி
புதுவையில் தமிழக அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுவையில் தமிழக அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
பஸ்கள் திடீர் நிறுத்தம்
13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று மாலையே புதுவையில் திடீரென தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பஸ் டிரைவர்கள் பஸ்சை உப்பளம் சாலையில் உள்ள பணிமனையில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
பயணிகள் கடும் அவதி
இதற்கிடையே ஒரு சில பஸ்கள் மட்டும் நேற்று மாலையில் இயக்கப்பட்டன. இதனால் புதுவை பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பயணிகள் அந்த பஸ்களில் முண்டி அடித்துக்கொண்டு ஏறி இடம் பிடித்தனர். அப்போது அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பெரும்பாலான பயணிகள் புதுவையில் இருந்து சென்னை, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு பஸ்சில் நின்றபடியே பயணம் செய்ததை காண முடிந்தது. சிலர் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.
இதனால் புதுவை பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இதில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பஸ்களை இயக்க நடவடிக்கை
இதுகுறித்து புதுவையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நாளை (அதாவது இன்று) பொதுமக்கள், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று டிரைவர்களை கொண்டு வழக்கம் போல பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.