தாராவியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாக்கடை தடுப்பு வேலி அமைக்கப்படுமா?
மும்பை தாராவியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் சாக்கடை கால்வாயில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மும்பை,

தூர்வாரும் பணி
மும்பையில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கும். மழைக்காலத்தில் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக ஆண்டுதோறும் சிறிய மற்றும் பெரிய கழிவுநீர் கால்வாய்கள் மாநகராட்சியால் தூர்வாரப்பட்டு வருகின்றன. ஆயினும் நகரில் சில இடங்களில் இன்னும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவே இல்லை. இதனால் அந்த கழிவுநீர் கால்வாய்கள் குப்பைகள் மண்டி கிடக்கின்றன. சுகாதார சீர்கேடாகவும் காட்சி அளிக்கின்றன.
ஜூன் இரண்டாவது வாரத்தில் பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மழைக்காலத்திற்குள் அனைத்து சாக்கடைகளும் தூர்வாரப்பட்டு விடுமா? என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது.
சாக்கடையில்...
அதே நேரத்தில் சில இடங்களில் மழைநீர் வேகமாக வழிந்து ஓடுவதற்கு வசதியாக சாக்கடைகள் தூர்வாரப்பட்டு அவற்றின் இருபுறத்திலும் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக தாராவி ராஜீவ்காந்தி நகரில் சாக்கடை தூர்வாரப்பட்டு கான்கிரீட் சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன. இங்கு கான்கிரீட் சுவரை தொட்டபடி ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் குடிசைவாசிகள் தங்கள் வீட்டின் வாசலில் இருந்து அடுத்த அடியை எடுத்து வைத்தால் சாக்கடையில் தான் கால் வைக்க முடியும். அந்த அளவிற்கு சாக்கடையுடன் ஓட்டி வீடுகள் உள்ளன.
சாக்கடையின் இருபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புச்சுவர் மீது தான் இவர்கள் நடந்து செல்ல முடியும். சற்று கால் தவறினாலும் சாக்கடைக்குள் தான் விழவேண்டும்.
தடுப்பு வேலி
சிறு குழந்தைகளும் அந்த கான்கிரீட் தடுப்புச்சுவர் மீது ஏறி செல்வதை பார்க்கும் போதே நெஞ்சு பதறுகிறது. வேறு வழியில்லை என்பதால் குழந்தைகளும் அந்த வழியாகத் தான் செல்ல வேண்டி உள்ளது. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்த சாக்கடை எந்த நேரத்திலும் உயிர் பலி வாங்குவதற்கு காத்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
பெரியவர்கள் தவறி விழுந்தாலும் மீட்க முடியுமா என்பது சந்தேகமே. எனவே இந்த சாக்கடையால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். மழை நேரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் உடனடியாக அந்த சாக்கடையின் இருபுறத்திலும் உள்ள கான்கிரீட் தடுப்புச்சுவரில் யாரும் தவறி விழுந்து விடாத அளவிற்கு தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.