திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் முன்கூட்டியே தொடக்கம்
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் முன்கூட்டியே தொடக்கம், குமுளி பஸ்சை பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திண்டுக்கல்
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் முன்கூட்டியே தொடங்கியது. குமுளி பஸ்சை பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி
தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை வரைவு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளுக்காக 15-ந் தேதி (அதாவது இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என அறிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அரசுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், இறுதி கட்டமாக நேற்றும் போக்குவரத்து அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்த தகவல் பரவியதும், பணியில் இருந்த அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் பஸ்களை பணிமனைகளுக்கு திருப்பினர்.
முன்கூட்டியே தொடக்கம்
திண்டுக்கல் போக்குவரத்து மண்டலத்தில் உள்ள திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் முன்கூட்டியே போராட்டம் தொடங்கியது. இங்கு மொத்தம் 15 பணிமனைகள் உள்ளன. டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 283 பேர் பணிபுரிகிறார்கள். போக்குவரத்து சங்கங்களுக்கும், அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த தகவல் கிடைத்ததும், போராட்டத்தை அறிவித்த சங்க ஊழியர்கள் பஸ்களை பணிமனைக்கு கொண்டு செல்ல தொடங்கினர்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் மட்டும் பஸ்களை தொடர்ந்து ஓட்டினர். அவர்கள் கணிசமாக இருப்பதால் பெரும்பாலான பஸ்கள் இயங்கின. இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்க நேரிட்டது.
வாக்குவாதம்
திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு வந்த சிலர், ‘15-ந்தேதி முதல் பஸ்கள் ஓடாது’ என்ற அறிவிப்பு நோட்டிசை பஸ்களில் ஓட்டினர். மேலும், மற்றவர்களையும் பஸ்களை ஓட்டக்கூடாது என கூறினர். அங்கு வந்த போலீசார், அவர் களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.அப்போது,அவர்களுக் குள்வாக்குவாதம்ஏற்பட்டது.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டார். அவர் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
முற்றுகை போராட்டம்
இதற்கிடையே, தேனியில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் குமுளி செல்லும் பஸ்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தற்போது வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த கோவிலுக்கு செல்ல தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது. திருவிழாவிற்கு வந்த பலர் தங்கள் ஊர்களுக்கு செல்ல பஸ்கள் கிடைக்காமல் தவித்தனர். கொடைக்கானல், பழனி, தேனி போன்ற இடங்களுக்கு சுற்றுலா வந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
20 சதவீதம்
இது குறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மாவட்டம் முழுவதும் 20 சதவீத பஸ்களை பணிமனைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்கும் வகையில், போராட்டத்தில் பங்கேற்காத மற்ற அனைவரையும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தி உள்ளோம். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது’ என்றார்.