தாராபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், 14 பேர் கைது;
தாராபுரம்,
தாராபுரம் நல்லம்மன்நாய்க்கன் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வாயில் கருப்பு துணியை கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுப்பிரியர்கள் கூட்டம்
தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. அந்த வகையில் தாராபுரம் நகர பகுதியில் மொத்தம் 11 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. அதில் தற்போது 8 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் மீதமுள்ள 3 கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
இதில் நகர பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பூக்கடை கார்னர் பகுதியையொட்டி, நல்லம்மன்நாய்க்கன்பேட்டையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
மேலும் அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வாயில் கருப்பு துணியை பொதுமக்கள் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
நல்லம்மன்நாய்க்கன் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையினால் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல முடியவில்லை. விதிகளுக்கு புறம்பாக இந்த டாஸ்மாக் கடையில், இரவு 12 மணி முதல் காலை 5 மணிவரை மதுவிற்பனை நடைபெறுகிறது.
இதனால் இரவு-பகல் எந்த நேரமும் நல்லம்மன்நாய்க்கன்பேட்டை வீதியில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வாகனங்களில் வரும் மதுப்பிரியர்கள் சாலைகளில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்துவிட்டு சென்று விடுகிறார் கள்.
இடமாற்றம் செய்ய கோரிக்கை
இதனால் கடைகளில் வியாபாரம் செய்ய முடிவதில்லை. பொதுமக்களின் வாகனங்கள் அடிக்கடி திருட்டுப்போகிறது. மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு, குடியிருப்புகளுக்கு முன்பாக படுத்துக்கிடப்பதும், தகராறில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பள்ளிக்குழந்தைகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நல்லம்மன்நாய்க்கன் பேட்டையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கைவைத்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
14 பேர் கைது
இதேகோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று கூறினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து, பூங்காசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பிறகு மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.