நீடாமங்கலத்தில் தூக்குப்போட்டு பெண் சாவு: தற்கொலைக்கு முன் செல்போன் வீடியோவில் பேசிய காட்சி வெளியானது
நீடாமங்கலத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்போன் வீடியோவில் பேசிய காட்சி வெளியானது.
நீடாமங்கலம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குயவர் தெருவில் வசித்து வருபவர் முருகப்பன் (வயது40). விவசாயி. இவருடைய மனைவி கவுரி(23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரதிக்ஷா என்ற 1½ வயதில் பெண்குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று காலை முருகப்பன் தனது மகளை அழைத்துக் கொண்டு சிக்கப்பட்டில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். வீட்டில் கவுரி மட்டுமே தனியாக இருந்துள்ளார். பின்னர் வயலில் இருந்து முருகப்பன் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டுக்குள் கவுரி மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் வந்து கவுரியின் உடலை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரிய வந்தது.
செல்போன் வீடியோவில் பேசிய காட்சி
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கவுரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே கவுரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது செல்போனில் பேசிய வீடியோ காட்சி வெளியானது. அதில் தன்னை(கவுரி) தனது கணவர் முருகப்பன் கொடுமைப்படுத்தியதால் தனது உயிரை மாய்த்து கொள்வதாகவும், மகள் பிரதிக்ஷாவை தனது தாய், தந்தை தான் வளர்க்க வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கவுரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து நீடாமங்கலம் போலீசார் முருகப்பனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.