15. வலியைத் தாங்குவதே வலிமை
வாழ்க்கை என்பது வலிகளின் தொகுப்பு. பசி ஒரு வலி, புறக்கணிப்பு வலி, அவ மானம் வலி.
உடலுக்கும் மனத்துக்குமான வலிகளுக் கிடையே ஊசலாடும் வாழ்க்கை. சிலர் வலிகளால் உடைந்து விடுகிறார்கள், சிலர் உடைத்து எறிகிறார்கள்.
நல்ல வளர்ப்பு என்பது வலியைத் தாங்கப் பழக்குவதே. வறட்சிக்கும் தாக்குப்பிடிக்கும் பயிர்களையே உழவர்கள் விரும்பு கிறார்கள். சலசலத்து ஓடும் நீரின் வரத்து எப்போதுமிருக்க, அன்றாடம் கவனிப்பு நன்றாக இருக்க எக்கச்சக்க எருவைத் தின்று வளரும் பயிர்களை உயர்ந்த ரகங்களாகக் கருத முடியாது. நீர் வார்க்காமல் வளர்ந்து கனிகளைத் தரும் மரங்களையே காலம் காத்து வருகிறது. மனிதன் நட்ட மரங்களைக் காட்டிலும் மண்ணே நட்ட மரங்களே அதிகம். கரங்கள் நட்ட மரங்களைக் காட்டிலும் காற்றே நட்ட மரங்களே அதிகம்.
சில சமூகங்கள் வலியைத் தாங்கக் கற்றுத்தருகின்றன. அங்கு காதுகுத்துவது சடங்குக்காக அல்ல, சங்கடத்தைத் தாங்கக் கற்றுத் தருவதற்காக.
மரத்துப்போக மருந்து போடாமல் அங்கு காதணி மாட்டப்படும். வலியையும் ஏற்றுக்கொள்வதற்கு குழந்தைகள் பழக வேண்டும். வலியை மறக்க இனிப்பு தரப்படுவதில்லை. மாறாக, இனிப்பு வேண்டுமென்றால் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தாத்பர்யம் மனத்தில் பதியவே இந்த மகரந்தச்சேர்க்கை.
வீரம் என்பது வலியைப் பொருட்படுத்தாமலிருப்பது என்பதை உணர்த்துவதற்காக, புறநானூறு மரணத்தையும் மாண்புடையதாக மாற்றிய தகத்தாய தமிழ்ச் சமுதாயத்தைப்பற்றிப் பதிவு செய்தது. போரில் இறந்தவர்களை நடுகல் நாட்டி வழிபட்டதை விவரித்தது, மார்பின் வழியாகப் பாய்ந்த வேல் முதுகின் வழியாக வெளிப்பட்டாலும் நாணி, வடக்கிருந்த தன்மானம் உள்ளவர்களைப்பற்றிப் புகழ்ந்துரைத்தது. வலியைப் பொறுத்துக்கொண்டவர்கள் வழிபடப்பட்டார்கள்.
திருக்குறளில் போர்க்கள நிகழ்ச்சியை வார்த்தைகளால் வண்ண ஓவியம் தீட்டும் வள்ளுவர், கையில் வைத்திருந்த வேலை எதிரே பிளிறிக்கொண்டு வந்த களிறின்மீது எறிந்த வீரன் அடுத்த யானையின்மீது எறிவதற்கு வேலில்லாத காரணத்தால் மார்பில் தைத்திருந்த வேலைப்பிடுங்கி எறிந்த தாகக் காட்சிப்படுத்துகிறார்.
கலைகளும், காவியங்களும் வலிகள் சகஜம் என்கிற மையக்கருத்தை ஒட்டியே வடிவமைக்கப்பட்டவை.
இதிகாசங்களில் அதிக வலியைப் பொறுத்துக்கொள்பவர்கள் நாயகர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். தமிழ்ப் படங்களில் கையில் பாய்ந்த குண்டை கதாநாயகனே குத்தி யெடுப்பதைப்போல காட்சிகள் உண்டு. ரத்தத்தைக் கண்டு சித்தம் கலங்காமலிருப்பது வெற்றிக்கான அறிகுறி என்கிற கருத்து அவற்றில் சூட்சுமமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அடுத்தவர்களுக்காக வலியைத் தாங்குவது குடும்ப வாழ்க்கை. வலிகளின் உச்சம் பிரசவ வலி. அதைத் தாய் தாங்கிக்கொள்வதாலேயே குழந்தைகள் பிறக்கின்றன. பெற்றோர்கள் எத் தனையோ வலிகளை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தாங்கி வளர்ப்பதால் குடும்பம் என்கிற அமைப்பு இன்னமும் கொண்டாடப்படுகிறது.
பூச்சிகளில் கலவி முடிந்ததும் ஆண் பூச்சியை பெண் பூச்சி தின்றுவிடுகிற நேர்வுகள் உண்டு. அங்கு இனவிருத்தியே சிருஷ்டி ரகசியம். இயல்பூக்கத்தால் உந்தப்படும் அவற்றிற்கு சந்து வழியாகக்கூட பந்தபாசம் வருவதில்லை. மனிதர்களில் வாரிசுகளுக்காக உயிரைத் தருகிற உத்தமர்கள் உண்டு.
கர்ப்பிணிப் பெண்ணிடம் ‘தாயைக் காப்பாற்றுவதா?, சேயைக் காப்பாற்றுவதா?’ என்கிற கேள்வி ஒருபோதும் கேட்கப்படுவதில்லை. அவள், ‘சேயைக் காப்பாற்றவே சொல்வாள்’ என்கிற சேதி அவர்களுக்குத் தெரியும். எனவே கணவனிடம் மட்டுமே அவர்கள் கேட்பார்கள். விடை தெரிந்த வினா அது.
சமூகத்திற்காக வலியைத் தாங்குவதே பொது வாழ்க்கை. விழுந்த அடிகளை எல்லாம் தாங்கிக் கொண்டதால் எழுந்து நின்றவர் மகாத்மா. அவமான அடிகளை பொறுத்துக்கொண்டதால் சுயமரியாதையை சொல்லித் தந்தவர் பெரியார். புறக்கணிப்புகளை சுண்டியெறிந்ததால் நிமிர்ந்து நின்றவர் அண்ணல் அம்பேத்கர்.
மக்களுக்காகப் பணியாற்றுவது எப்போதும் மலர் மஞ்சமாக இருப்பதில்லை. அது அம்புப்படுக்கையாய் துன்பம் தருவது. இருந்தாலும் நம் வலியால் இச்சமூகத்தின் பிணி நீங்கட்டுமே என்கிற எண்ணத்தில்தான் பல சான்றோர்கள் களத்தில் இறங்கி கடமையாற்றினார்கள். அவர்கள்மீது எறியப்பட்ட பூங்கொத்துகளைவிட வீசப்பட்ட அழுகிய முட்டைகள் அதிகம். பலரை இருக்கும்போது தவிக்கவிட்டு இறந்த பிறகு தூக்கித் திரிகிறவர்கள் நாம். அவர்கள் மகுடங்களுக்காகவோ, மாலைகளுக்காகவோகூட தலைகுனியத் தயாராக இருந்ததில்லை.
இன்று சில இளைஞர்கள் சொகுசாக வளர்ந்தவர்கள். மாந கரத்தில் அடுக்ககங்களில் வாழும் பலர் வெறும் கால்களில் நின்று பழகாதவர்கள். சிலர் மண்ணையே மிதிக்காமல் மண்ணுக்குள் சென்றுவிடுகிறார்கள். காத்திருப்பது இவர்களுக்கு சாத்தியப் படாத விஷயம். அனைத்துமே இவர்களுக்கு இணைய வடிவில் என்பதால் பதிவுச்சீட்டு பெறுவதிலிருந்து கடவுச்சீட்டு புதுப்பிப் பதுவரை கணினியே இவர்களுக்கு வைகுண்டவாசல். கண்டதைத் தின்பதால் வயிற்றுக்கடுப்பு தெரிந்த அளவிற்கு, வலி ஏற்படுமளவு கால்கடுக்க நிற்பது தெரிவதில்லை. இவர்கள் கழிவறைக்குக்கூட காரில் போக நினைப்பவர்கள். இவர்களால் நகச்சுத்தி வந்தால்கூட பொறுத்துக்கொள்ள முடியாது.
வலி உடலில் இல்லை, மனதில் இருக்கிறது. கத்தி கீறினால் எல்லோருக்கும் வலிக்கவே செய்யும். இது பெரிதில்லை என நினைத்தால் அதைப் பொருட்படுத்தாமல் பணி செய்ய இயலும். கரப்பான்பூச்சிகள் தலையை இழந்த பிறகும் உயிர் வாழக்கூடியவை.
வைராக்கியம் இருப்பவர்களுக்கு வலியைக் காட்டிலும் வழி முக்கியம். நோக்கம் மட்டுமே அவர்கள் தொலைநோக்குப் பார்வையில் துல்லியமாய்த் தெரிவதால் வழியும் ரத்தத்தை அவர்கள் துடைத்து எறிந்துவிட்டு முன்னேறுகிறார்கள். தப்பிக்கிறவர்களுக்கு வலி நிவாரணம். அதை வைத்துக்கொண்டே பணியிலிருந்து விலக்குப்பெற முயற்சி செய்வார்கள். சுண்டுவிரலில் நகம் பெயர்ந்ததற்கு மாவுக்கட்டுப்போடும் வித்தாரக்கள்ளர்கள் இவர்கள்.
தேர்வு தித்திக்கிற நிகழ்வு அல்ல. கடைசித் தேர்வு முடியும்போது ஒலிம்பிக்கில் வென்றதைப்போல மகிழ்ந்து கொண்டாடும் மாணவர்களைப் பார்க்கலாம். அவர்களுக்குத் தெரிவதில்லை, தேர்வு ஒருபோதும் நிற்கப்போவதில்லை என்கிற உண்மை. கல்லூரியில் முதல் மதிப்பெண்ணில் தேறிய மாணவனை அவன் நேசித்த பெண் தேர்வுசெய்ய மறுக்கிறாள். பதக்கங்கள் அனைத்தையும் பெற்ற ஒருவன் ‘வளாக நேர்காணலில்’ நிராகரிக்கப்படுகிறான். நாளடைவில் அழுத்தமான உண்மை ஒன்று புரியும், தேர்வு என்பது பொதுவான மதிப்பீடு அல்ல, தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஆனால் அதற்குள் முதலிடத்தைத் துரத்தி வாழ்நாளை அவர்கள் வீணடித்து விடுவார்கள்.
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதி. அங்கு தட்பவெப்பம் அனுசரனையாக இருக்கும். அங்கு முரளி என்கிற மாணவன். அந்தப் பெயருக்கு சமஸ்கிருதத்தில் ‘புல்லாங்குழல்’ என்று பொருள்.
ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் அவன் சகோதரனோடு தாய்மாமனின் பண்ணைக் கிணற்றைப் பார்வையிடச் சென்றான். யாரோ மோட்டார் பம்பை திருடிவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டு நிலவரமறிய சென்ற அவர்கள் தப்பித்தவறி காட்டுப் பன்றிகளை விரட்டியடிக்க போடப்பட்டிருந்த மின்வேலியில் இருசக்கர வாகனத்தை மோதிவிட்டார்கள்.
முரளிக்கு இடதுகால் முழுவதும் நிறைய தீக்காயங்கள். முழங்கால் முறிந்தது. முரளியின் தாய் ஆறு மாதங்களிருக்கும்போதே இறந்துபோனவர்.
தாய்மாமனே தாயாக மாறினார். அத்தை அன்பாக இருந்தார். தந்தை மறுமணம் செய்துகொண்டு மகனை மறந்தார். சூளகிரியில் வளர்ந்தான் முரளி. அவனுக்கு ஒரு சகோதரி. ஏழைகளுக்கு பெயர்களில் மட்டும் கடவுள் இருக்கிறார். அவர் பெயர் தேவி. பெங்களூரு நகரத்தில் வீட்டைப் பராமரிக்கும் வேலை. முரளிக்கு விபத்து ஏற்பட்டதால் வேலையை விட்டுவிட்டு தம்பியைக் கவனிக்க மருத்துவமனைக்கு வந்தார். எலும்புகளை சீரமைத்து சிகிச்சை நடந்தது.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கிற கொக்குகள்போல பெற்றோர்கள் மேல்நிலைப்பள்ளித் தேர்வுக்காகவே தவ மிருக்கிறார்கள். அந்தத் தேர்வை கால் சிதைந்த முரளியும் எழுத வேண்டும். அதற்கான சிறப்பு அனுமதி முரளிக்குக் கிடைத்தது. சென்றுவருவதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தது. தேர்வை எழுத உதவியாளருக்கும் தேர்வுத்துறை அனுமதித்தது. ஆனால், சுயமாக எழுத முரளி முடிவு செய்தான். அத்தனை தேர்வையும் வெற்றிகரமாக அத்தனை வலியையும் பொறுத்துக்கொண்டு எழுதி முடித்தான்.
முறிந்த காலோடு இருந்தாலும் ஒடிந்த மனது அவனுக்கு இல்லை. குனிந்து எழுதுவதால் பிளக்கும் முதுகுவலி ஒவ்வொரு நாளும் ஏற்படும். படுக்கையில் இருந்தவாறு தனி வகுப்பறையில் வேள்வியைப்போல கேள்வித்தாள்களை அவன் விடைகளால் விளாசினான். ‘எனக்கு ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரியாவதே லட்சியம்’ என்று நம்பிக்கையாகப் பேசுகிறான்.
இந்தப் புல்லாங்குழலிலிருந்து பூபாளம் பிறக்கும் என்கிற நம்பிக்கையே இச்செய்தி தரும் சேதி.
‘மசோகிஸ்ட்-சேடிஸ்ட்’
வலிகளைக் கொண்டாடும் மனப்பிறழ்வு ஒன்று உண்டு. இவர்களுக்கு ‘மாசோகிஸ்ட்’ என்று பெயர். இவர்களுக்கு அடி விழுந்தால்தான் கிளர்ச்சி கிடைக்கும். அவர்களின் சொர்க்கம் சொறிவதில் இருக்கிறது. இவர்களை நாம் வலியைத் தாங்கும் பட்டியலில் சேர்க்க முடியாது.
அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தி உச்சி குளிர்பவர்கள் உண்டு. அவர் களுக்கு ‘சேடிஸ்ட்’ என்று பெயர். யாராவது அடிக்க வேண்டும் என வற்புறுத்தும் மாசோகிஸ்டுகளிடம், அடிக்க மாட்டேன் என்று சொல்லி சேடிஸ்டுகள் வலியை ஏற்படுத்தி மகிழ்வார்கள்.