செங்குன்றம் அருகே மினி வேன் மோதி டிரைவர் பலி

செங்குன்றத்தை அடுத்த சோழவரத்தைச் சேர்ந்தவர் கோபி.

Update: 2017-05-13 23:00 GMT

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பழைய எருமைவெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோபி(வயது 43). இவர், செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 10–ந்தேதி இவர், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்தில் இருந்து எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

செங்குன்றம்–திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பழைய விமான தளம் அருகே சென்ற போது பின்னால் வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று கோபி பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்–இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான கோபிக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், லித்து(12), பவித்ரா(10) என 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்