அரசு பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிகொண்டு நின்று கொண்டிருந்தது.

Update: 2017-05-13 21:39 GMT

பெரம்பலூர்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிகொண்டு நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 49) டிரைவராக இருந்தார்.

 அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் திடீரென பஸ்சை வழிமறித்து டிரைவர் ராஜேந்திரனிடம் திடீரென தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த 2 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

 அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், பெரம்பலூர் நியூகாலனியை சேர்ந்த கண்ணன் (26), ஆலம்பாடிரோடு பகுதியை சேர்ந்த குமரேசன் (20) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், குமரேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்