சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி: மலர்க்கண்காட்சி 21–ந்தேதி வரை நீட்டிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மூணாறில் நடைபெற்று வரும் மலர்க்கண்காட்சி 21–ந்தேதி வரை நீட்டிப்பு
மூணாறு,
மூணாறில், நடைபெற்று வரும் மலர்க்கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுவதாக சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மூணாறுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததையடுத்து மலர்கண்காட்சியை வருகிற 21–ந்தேதி வரை நீட்டிக்க சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.
கண்காட்சியில் மலர் மற்றும் புற்களால் உருவாக்கப்பட்ட யானை உருவம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் தினசரி வந்து பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.