கொலைகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி: குற்றவாளிகளை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீசாரை மாற்ற உத்தரவு
புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காவல்துறை அதிகாரிகளை படிப்படியாக இடமாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசாரை மாற்ற போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் துரதிர்ஷ்டவசமாக கிராமப்புறங்களில் தொழில்ரீதியாகவும், குடும்ப பிரச்சினைகள் காரணமாகவும், கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் சிலவற்றில் அவர்களது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
குண்டர் சட்டம் பாயும்
புதுவையில் வீடு, நிலம் அபகரிப்பு, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, குழந்தைகளை கடத்தி பணம் கேட்பது போன்ற குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால் சுற்றுலாவில் வளர்ச்சி ஏற்படவில்லை. தொழில்போட்டியினால் ரவுடிகள் கொலைகளில் ஈடுபடுவது மிகவும் கவலை அளிக்கிறது.
போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடத்தி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். புதுவையில் குண்டர் தடை சட்டம் அமலில் உள்ளது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகளை மாநிலத்தைவிட்டே வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பதுதான் எங்கள் கொள்கை.
அரசுக்கு எதிராக சதி
இருந்தபோதிலும் கடந்த 2 மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகின்றன. முன்விரோதம், தொழில்போட்டி என்ற பெயரில் கொலைகளை நடத்தி அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சதிவேலை நடந்துள்ளது. அத்தகையவர்களை போலீசார் தயவு தாட்சண்யமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் புதுவையில் உலவிவருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறை தன் அதிகாரத்துக்கு உட்பட்டு உச்சபட்ச நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
புதுவை காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீது ஈவு, இரக்கம் காட்டக்கூடாது. ரவுடிகளால் அபகரிக்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எந்த தலையீடு இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு செயல்பட காவல்துறைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இந்தியர்கள் பிரச்சினை
கடந்த வாரம் டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காரைக்கால் மீனவர்கள் தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும் பேசப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில் வெளிநாட்டில் துன்புறுத்தப்பட்ட வீராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்கள், 10 படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதற்காக நடவடிக்கை எடுக்க தனி அதிகாரியாக ஒய்.எல்.என்.ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
வருகிற 16-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றையதினம் கவர்னர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடரில் சரக்கு சேவை வரி சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரினை 21 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மத்திய தேர்வாணையம் மூலம் புதுச்சேரிக்கு 13 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். விரைவில் இவர்கள் பணியில் சேர உள்ளனர். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 2-வது ஷிப்டை தொடங்கலாம். நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.4 ஆயிரமாக இருப்பதை ரூ.5 ஆயிரமாக அமைச்சர் கமலக்கண்ணன் உயர்த்தி உள்ளார்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.