வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் பிளஸ்–1 மாணவர் உள்பட 2 பேர் பலி

ஆம்பூர் பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் அன்பு.

Update: 2017-05-13 22:45 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் சார்லஸ் டேனியல் (வயது 16), பிளஸ்–1 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (17). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் ஏலகிரிமலைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆம்பூர் செங்கிலிகுப்பம் தேசியநெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு மினிவேன் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த மினிவேன் மீது இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் சார்லஸ் டேனியல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். ஜான்சன் பலத்த காயத்துடன் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). கூலி தொழிலாளி. நேற்று பிற்பகல் 3 மணியளவில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பெரியாங்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்