‘பிளாஸ்டிக்’ எரிபொருள்... புதுமை மாணவர்கள்!
இன்று உலகம் எதிர்கொள்ளும் இரு பெரும் பிரச்சினைகள், குறைந்துவரும் மரபு சார்ந்த எரிபொருள் வளம், குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகள்.
ஏ.பார்த்தசாரதி, ஆர்.அபிலாஷ்குமார், ஆர்.பிரேம்குமார், ஜி.ஆகாஷ்
ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதைப் போல, இந்த இரு பிரச்சினைகளுக்கும் ஒரே கண்டு பிடிப்பில் தீர்வு கண்டிருக்கிறார்கள், சில மாணவர்கள்.
கல்லூரி, பள்ளி மாணவர்களான அவர்கள் கூட்டு முயற்சியில், பிளாஸ்டிக்கில் இருந்து மோட்டாருக்கான எரிபொருளைத் தயாரித்து புதுமை படைத்திருக்கிறார்கள்.
சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி எந்திரவியல் நிறைவாண்டு மாணவர்களான பிரேம்குமார், அபிலாஷ்குமார், பார்த்தசாரதி, ஆகாஷ், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வேதிப்பொறியியல் நிறைவாண்டு மாணவர்கள் சுரேஷ், கார்த்திகேயன், புதுச்சேரி ஏகலைவா சர்வதேசப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம் ஆகியோர்தான் அந்த இளம் விஞ்ஞானிகள்.
அவர்களிடம் பேசுவோம்... பிளாஸ்டிக் எனும் பெரும்பூதம்
“இன்றைய சூழலில் பிளாஸ்டிக் என்பது தவிர்க்க முடியாத தொந்தரவாக ஆகிவிட்டது. நம் அன்றாட வாழ்வில் கடையில் பொருட்களை வாங்கிவரும் ‘கேரி பேக்’ முதல், வீட்டில் உபயோகப்படுத்தும் சின்னச் சின்னப் பொருட்கள் வரை பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை. விலை மலிவு, எந்தப் பொருளாகவும் தயாரிக்கலாம் என்பது பிளாஸ்டிக்கின் வசதி.
ஆனால் எளிதில் மக்காத தன்மை காரணமாகத்தான் பூமிக்கு எதிரியாகிறது பிளாஸ்டிக். எரித்தல், நிலத்தில் குவித்தல் என்று பிளாஸ்டிக்கை அழிக்கும் முறைகளும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதாகத்தான் உள்ளன. எரிக்கும்போது காற்றும், குவிக்கும்போது மண்ணும் மாசுபடுகின்றன.
குப்பைமேடுகளில் தவறுதலாக தீ வைக்கப்படும்போதும் குபுகுபுவென்று கிளம்பும் புகை, சுற்றுப்புற மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைப்பதாக இருக்கிறோம். இதை நாம் அனைவரும் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
உலகளவில் கடந்த 2001-ம் ஆண்டுவரை 4.6 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன என்றால் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கும். அதன்பின், கடந்த 2010-ம் ஆண்டு வரை 1.2 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளாக பூமியில் குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் மட்டும் நாளொன்றுக்குச் சுமார் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியாகின்றன. இது கணக்கில் வந்த பிளாஸ்டிக் அளவு. கணக்கில் வராமல் நாள்தோறும் சுமார் 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே எரிக்கப்படுகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் தினந்தோறும் 40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இந்த அளவு, மேலும் மேலும் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
நோய்களுக்கு அழைப்புச்சீட்டு
பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்கும் முறையற்ற வழிகள், இவற்றால் ஏற்படும் பிரச்சினையை மேலும் வளர்க்கவே செய்கின்றன. பொது இடங்களில் பிளாஸ்டிக்கை எரிக்கும்போது வெளிவரும் வாயுக்கள், வாந்தி, மயக்கம் முதல், மனிதகுலத்தை அச்சுறுத்தும் புற்றுநோய் வரை ஏற்படுத்துகின்றன. நுரையீரல், இதயம் என்று மனிதனின் முக்கிய உள்ளுறுப்புகளை எல்லாம் பிளாஸ்டிக் நச்சு வாயு சீர் குலைக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களை கிடங்குகளில் சேகரித்து வைப்பதால், மழைக் காலத்தில் தேங்கும் மழைநீரால் டெங்கு, மலேரியா மற்றும் பல தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
1907-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில், லியோ கென்ட்ரிக் பெக்கன்லைட் என்பவரால் தயாரிக்கப்பட்ட முதல் பிளாஸ்டிக், இன்று வரை மக்காமல் இருக்கிறது. இதிலிருந்தே, பிளாஸ்டிக் என்பது அழியா வரம் பெற்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆக, பயன்படுத்தும்போது வசதியாக இருந்தாலும், தீராத் தலைவலியாக மனிதகுலத்தை பிளாஸ்டிக் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
தீர்வைத் தேடி...
பிளாஸ்டிக்கால் ஏற்படும் அபாயங்களை அறிந்திருந்தும் நாம் கண்டும்காணாமலும் இருக்கிறோம். ஆனால் எங்களை இது உறுத்தியது, ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று உந்தியது. அதற்கான தொடர் முயற்சியில்தான், பிளாஸ்டிக் எரிபொருளை உருவாக்கிச் சாதித்திருக்கிறோம்.
பிளாஸ்டிக்கில் 7 வகைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளில் இருந்து எரிபொருள் தயாரிக்க முடியாது. பி.இ.டி.இ. எனப்படும் பிளாஸ்டிக்கில் ஆக்சிஜன் சதவீதம் அதிகமாக இருப்பதால் அதை எரிபொருள் தயாரிப்பதற்கான எங்களின் வெப்பச்சிதைவு அறையில் பயன்படுத்த முடியாது.
பி.வி.சி. பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள் எடுக்க முயன்றால் அதிலிருந்து வெளிப்படும் குளோரின் வாயு தண்ணீருடன் கலந்து அமிலமாக மாறும் என்பதை உணர்ந்தோம். எனவே இவ்வகை பிளாஸ்டிக்குகளை எல்லாம் எரிபொருள் தயாரிக்கும் முயற்சிக்குத் தவிர்த்தோம்.
பிளாஸ்டிக் எரிபொருள் தயாரிக்கும் எந்திரம்
டி.கார்த்திகேயன் - ஆர்.சுரேஷ் - ஸ்ரீராம் சங்கர்
எரிபொருள் தயாரிப்பு முறை
பொதுவாக பாலிஎத்திலீன் வகை பிளாஸ்டிக்தான் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. எனவே நாங்கள் அதையே தேர்ந்தெடுத்து அதிலிருந்து எரிபொருள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். பின்னர் அதை சிறு துகள்களாக மாற்றும் எந்திரத்தின் உதவியுடன் சிறுதுகள்களாக மாற்றினோம். அடுத்து,
வெப்பச்சிதைவு அறையை உருவாக்குவதற்காக துத்தநாக, இரும்புக் கலவை, வார்ப்பு இரும்புக் கலவை கொண்ட உலோகத்தைப் பயன்படுத்தினோம்.
சிறு சிறு துகள்களாக்கிய பிளாஸ்டிக்கை வெப்பச்சிதைவு அறையினுள் இட்டு, 1 கிலோ பிளாஸ்டிக்குக்கு 50 கிராம் சாம்பலை ஊக்கியாகச் செலுத்தினோம்.
பின்னர் அதை 280 டிகிரி முதல் 320 டிகிரி வரை சூடுபடுத்தினோம். இந்தச் செயல்பாடு நடந்து முடிவதற்கு 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகும். மேலும் இந்தச் செயல்பாட்டை விரைவுபடுத்த, வெப்பச்சிதைவு அறையில் வெப்பம் வெளியேறாத வகையில் வெப்பத்தடுப்புப் பொருட்களைப் பயன்படுத்தி முற்றிலுமாக மூடினோம்.
பிளாஸ்டிக்கை மேற்கண்ட வேதிவினைக்கு உட்படுத்துவதன் மூலம், வெளியில் வரும் வாயுவை கன்டன்சர் மூலம் திரவ எரிபொருளாக மாற்றிச் சேகரித்தோம். ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து 900 மி.லி. எரிபொருள் கிடைக்கும். இம்முறையில் கிடைக்கும் எரிபொருளின் விலை அதிகபட்சம் ரூ. 40-தான் இருக்கும் என்பதால், மலிவு விலையில் எரிபொருள் பெறலாம். மேலும் இந்த எரிபொருள் மோட்டாரில் பயன்படுத்தப்படும்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. எரிபொருள் தயாரிப்பின்போது கடைசியில் குறைந்த அளவு மிஞ்சும் கழிவுகளையும்கூட கல் போன்ற வடிவங்களில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றிவிடலாம்.
இதில் எரிபொருள் தயாரிப்பு தொடர்பான ஆய்வுகளில் பிரேம்குமார், அபிலாஷ்குமார், பார்த்தசாரதி, ஆகாஷ் ஆகியோரும், எரிபொருளைப் பயன்படுத்தி என்ஜினை இயக்கும் ஆய்வில் சுரேஷ், கார்த்திகேயன் ஆகியோரும், இதுதொடர்பான ஆவணங்கள் சேகரிப்பு போன்ற பணிகளில் ஸ்ரீராம் சங்கரும் ஈடுபட்டோம்.
நாங்கள் திட்டமிட்டபடி இதற்கான சாதனத்தை உருவாக்க உதவியதுடன், தேவையான ஆலோசனைகளையும் தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜெயராஜ், முரளி ஆகியோர் வழங்கினர்.
இந்த எரிபொருளைத் தயாரித்ததன் மூலம், நம் நாட்டுக்கும் உலகுக்கும் ஒரு நன்மை புரிந்த திருப்தி எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எங்களது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள் தயாரிக்க அரசாங்கம் அல்லது தகுதிவாய்ந்த தனியார் முன்வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” என்றனர்.
பூமியின் பிரதான பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சித்திருக்கிற இந்த மாணவ விஞ்ஞானிகள் மாண்புமிக்கவர்களே!