கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை நாராயணசாமி உறுதி
கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்த விவரத்தை வெளியிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்து இருந்தாலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் 31 பேர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 8 பேர்தான் அதற்கு மேல் பெற்று இருந்தனர்.
கல்வித்தரத்தை உயர்த்த...
1,150 மதிப்பெண்ணுக்கு மேல் 262 பேர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 182 பேர்தான் பெற்றுள்ளனர். 1100-க்கு மேல் 935 பேரும், 1000-க்கு மேல் 2,848 பேரும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை ஆசிரியர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளித்துள்ளோம். அதேபோல் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேங்க் பட்டியல்
தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் நலன்கருதி புதுச்சேரியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.