ரூ.6 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் போலீசார் உள்பட பத்து பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

கூரியர் நிறுவன வாகனத்தை கடத்தி ரூ.6 கோடி கொள்ளையடித்த 2 போலீசார் உள்பட பத்து பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-05-12 22:17 GMT

மும்பை,

கூரியர் நிறுவன வாகனத்தை கடத்தி ரூ.6 கோடி கொள்ளையடித்த 2 போலீசார் உள்பட பத்து பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ரூ.6 கோடி நகைகள் கொள்ளை

மும்பையில் உள்ள கூரியர் நிறுவன வாகனம் கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் 14–ந் தேதி பாந்திர கடல்வழி மேம்பாலம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு டாக்சியில் போலீசார் உடையில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து ரூ.6 கோடி தங்க நகை பார்சல்களுடன் கூரியர் நிறுவன வாகனத்தை கடத்திச்சென்றது.

பின்னர் அந்த கும்பல் கூரியர் நிறுவன வாகனத்தை தாராவி பகுதியில் விட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.

போலீசாருக்கு தொடர்பு

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாந்திரா போலீசார் கூரியர் நிறுவன டிரைவர் குஷ்பூதின் சேக்கை(வயது29) கைது செய்தனர்.

விசாரணையில் அவரது அண்ணன் நசீம் சேக், மரோல் போலீஸ் பயிற்சி நிலையத்தில் சப்– இன்ஸ்பெக்டராக இருந்த மகாதேவ் தென்காலே(29), நவிமும்பையில் போலீஸ்காரராக இருந்த மயூர் தங்டே(30) மற்றும் பாகாஜி(38), தயானந்த்(36), அப்ஜித்(28), சஞ்சய்(34), மிக்கெல்(29), சுபாஷ்(27) ஆகிய 10 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

10 ஆண்டு ஜெயில்

இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு 2 போலீசார் உள்பட 10 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்