குளராம்பதி குளத்தில் உள்ள நாட்டு கருவேல மரங்களை வெட்ட தடை

வேடப்பட்டி புதுக்குளம், குளராம்பதி, நரசாம்பதி உள்ளிட்ட குளங்களில் தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2017-05-12 21:45 GMT

கோவை,

பொதுப்பணித்துறை மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் வேடப்பட்டி புதுக்குளம், குளராம்பதி, நரசாம்பதி உள்ளிட்ட குளங்களில் தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. குளராம்பதி குளத்தில் நாட்டு கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. இந்த மரங்களை சிலர் வெட்டி செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் அந்த மரங்களில் எண் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது,

குளங்களில் உள்ள நாட்டு கருவேல மரங்கள் அடர்த்தியாக வளரக்கூடியது. குளத்தில் தண்ணீர் இருந்தால் அதிகமான பறவைகள் இந்த மரங்களில் கூடு கட்டி வாழும். அப்படி இருக்க, இந்த மரங்களை சிலர் வெட்டி செல்வதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நாட்டு கருவேல மரங்களை வெட்ட தடை விதிக்கப்பட்டு, குளராம்பதி குளத்தில் உள்ள மரங்கள் மீது எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்