ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 லட்சம் திருட்டு

பெரம்பூரை அடுத்த ஜமாலியா, ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 லட்சம் திருட்டு.

Update: 2017-05-12 21:30 GMT
பெரம்பூர்,

பெரம்பூரை அடுத்த ஜமாலியா, ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ்ராவ் (வயது 73). இவர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உதவி மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  இவர் நேற்று பெரம்பூரில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்தார். பின்னர் அந்த பணத்தை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்வதற்காக அதனை ஒரு பையில் வைத்து, மாநகர பஸ்சில் ஏறி அண்ணாசாலைக்கு சென்று கொண்டிருந்தார்.

ஓட்டேரியை கடந்துசென்றபோது நாகராஜ்ராவ் பையை பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.2 லட்சம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையை பிளேடால் அறுத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்