சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி இல்லை

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி இல்லை

Update: 2017-05-12 21:45 GMT
சென்னை,

பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த முடிவில் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி வீத புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் 28 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு அரசு பள்ளிகூட 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை. சென்னை மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகளில் இருந்து 4 ஆயிரத்து 359 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 3 ஆயிரத்து 935 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 90.27 சதவீதம் ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் 92 அரசு பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 433 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியதில் 12 ஆயிரத்து 964 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்ச்சி சதவீதம் 74.36 ஆகும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 111 அரசு பள்ளிகளில் இருந்து 21 ஆயிரத்து 18 மாணவ–மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் 17 ஆயிரத்து 170 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 81.69 ஆகும்.

மேலும் செய்திகள்