சிவமொக்கா நகரில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ‘திடீர்’ சோதனை
சிவமொக்கா நகரில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று கலெக்டர் லோகேஷ் திடீரென்று சோதனை மேற்கொண்டார்.
சிவமொக்கா,
சிவமொக்கா நகரில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று கலெக்டர் லோகேஷ் திடீரென்று சோதனை மேற்கொண்டார்.
திடீர் சோதனை
சிவமொக்கா நகரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தரமானதாக வழங்குவதில்லை. ரேஷன் கடைகள் சரியான நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை. சரியான அளவில் ரேஷன் பொருட்களை வழங்குவதில்லை. கேள்வி கேட்கும் மக்களை ரேஷன் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் தரக்குறைவாக பேசுகிறார்கள். பொதுமக்கள் கேட்கும் உணவு பொருட்கள் இருப்பதில்லை என மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட உணவு மற்றும் பொதுவினியோக துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், நேற்று காலை மாவட்ட கலெக்டர் லோகேஷ், மாவட்ட உணவு மற்றும் பொதுவினியோக துறை இணை இயக்குனர் சதாசிவப்பா ஆகியோர் சிவமொக்கா டவுன் வினோபா நகர், துங்கா நகர், திப்புநகர், ஆஜாத் நகர், சிகேஹட்டி, குருபர பாளையா, பாபூஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் திடீரென சோதனை நடத்தினார்கள்.
குற்றச்சாட்டு
அந்த ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் போதிய அளவு இருப்பு உள்ளதா?, உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் அந்தப்பகுதி மக்களிடம், ரேஷன் கடைகள் சரியான நேரத்திற்கு திறக்கப்படுகின்றதா? என்பது குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அப்போது பொதுமக்கள், ரேஷன் கடைகள் சரியான நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை என்றும், ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்துக் கொண்டு இல்லை என்று கூறுவதாகவும் ரேஷன் கடை உரிமையாளர்கள் மீது குற்றம்சாட்டினர். இதனால் கோபம் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து கலெக்டர் லோகேஷ் கூறுகையில், ‘பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களை தொடர்ந்து இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ரேஷன் கடைகளில் நடக்கும் தில்லு, முல்லு தெரியவந்துள்ளது. இதுபோன்று இனி அடிக்கடி சோதனை நடத்தப்படும்.
தவறை திருத்திக் கொள்ளாத ரேஷன் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் நடக்கும் தில்லு-முல்லுவை களைய வேண்டும்’ என்றார்.