சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியின் அருகே கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியின் அருகே நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. இதை அறிந்த மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் அந்த சூட்கேசில் வெடிகுண்டு இருக்குமோ? என சந்தேகம் அடைந்தனர்.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தினர். பின்னர் அங்கிருந்த மர்ம சூட்கேசை சோதனை செய்தனர்.
ஆனால் அந்த சூட்கேசில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன் பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் துணிகள் மற்றும் மடிக்கணினி இருந்தன. விமானத்தில் வந்த பயணி யாராவது அந்த சூட்கேசை தவற விட்டு சென்று இருக்கலாம் என தெரியவந்தது.
இதையடுத்து அந்த சூட்கேஸ் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.