பந்தலூர் அருகே நோய் பரவும் அபாயம்: கழிவுநீராக மாறிவரும் குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி
பந்தலூர் அருகே நோய் பரவும் அபாயம்: கழிவுநீராக மாறிவரும் குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி, நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பந்தலூர்,
பந்தலூர் அருகே கழிவுநீராக மாறிவரும் குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கழிவுநீராக மாறிய குடிநீர்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நீர் நிலைகளில் வறண்ட நிலை காணப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள விலங்குகளும் தண்ணீர் கிடைக்காமல் அலைமோதும் நிலை உள்ளது. தற்போது பெய்து வரும் மழை தீவிரம் அடைந்தால் தான், குடிநீர் பிரச்சினை தீரும் நிலை உள்ளது. இந்த நிலையில் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை உள்ளது. கிடைக்கிற நீரை பல நாட்கள் சிக்கனமாக வைத்து பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால் கிடைக்கிற குடிநீரும் சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் என்ன செய்ய முடியும்? பந்தலூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீர் கழிவுநீராக மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
நோய் பரவும் அபாயம்
எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றனர். எங்கள் பகுதி மக்களுக்கு கூவமூலா செல்லும் சாலையின் மேற்புறம் உள்ள ஓடையில் தொடங்கப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு வழங்கிய குடிநீர் சுகாதாரமற்று கழிவு நீராக மாறி வருகிறது. இதனால் நேடாகுடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
இதற்கு காரணம் வினியோகம் செய்யும் குடிநீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யப்பட வில்லை. இதனால் அசுத்தம் நிறைந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். மேலும் இதனால் டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து, தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர் தேக்க தொட்டிக்கு மேல் மூடி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.