ராம்கோ குழும நிறுவனர் மறைவு: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
நாகர்கோவில்,
இந்தியாவில் சிறந்த தொழில் நிறுவனங்களில் ஒன்றான ராம்கோ குழுமத்தின் நிறுவனரும், ஆன்மிக சிந்தனையாளரும், அனைவருக்கும் உதவும் பரந்த மனப்பான்மை கொண்டவருமான ராமசுப்பிரமணியராஜாவின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கும், ராம்கோ நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.