செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் வாகனம் மோதி பரிதாப சாவு

செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-05-12 20:00 GMT
செங்கோட்டை,

செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக இறந்தனர்.

கூலி தொழிலாளி


நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடம்பன்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்கையா மகன் கார்த்திக்(வயது 20), முத்தையா மகன் அய்யாச்சாமி(19). இவர்கள் இருவரும் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தனர். மாதத்துக்கு ஒரு முறை விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் இரவில் கேரளாவில் இருந்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். கார்த்திக் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை செங்கோட்டை அருகே புளியரை மெயின் ரோட்டில் உள்ள அரசு வங்கியின் அருகே அவர்கள் வந்து கொண்டு இருந்தனர்.

பரிதாப சாவு


அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், கார்த்திக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்ததில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அய்யாச்சாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அய்யாச்சாமியை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அய்யாச்சாமியும் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து தொடர்பாக செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன், புளியரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்