நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான

Update: 2017-05-12 22:45 GMT

சேலம்,

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம்.

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற மற்றும் (10+2+3 முறையில்) பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான 36 வாரங்கள் கொண்ட முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் 15–5–2017 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய இடங்கள் அரசு இட ஒதுக்கீட்டின்படி வழங்கப்படும். மேலும் 1–6–2017 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கீழ்கண்ட 3 சான்றிதழ்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும்.

1) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி.

2) கணினிச்சான்றிதழ் (எம்.எஸ். ஆபீஸ்).

3) நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்.

இதற்கான விண்ணப்பங்களை மேலாண்மை நிலையத்தில் ரூ.100 செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 12–7–2017 ந்தேதி மாலை 5.30 க்குள் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும். இதற்கான வகுப்புகள் 14–7–2017 ந்தேதி தொடங்கப்பட உள்ளது என துணைப்பதிவாளரும், முதல்வருமான சி.தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்