வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து படுகொலை கணவருக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை

கொலபாவில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்

Update: 2017-05-11 22:15 GMT

மும்பை,

கொலபாவில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதில் அவரது கணவருக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழுத்து அறுத்து கொலை

மும்பை கொலபா பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா(வயது28). இவரது கணவர் மகேந்திரா. நேற்று முன் தினம் மகேந்திரா வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஸ்வேதா மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் மாலை மகேந்திரா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் மனைவி ஸ்வேதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் மனைவியை மீட்டு ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ஸ்வேதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அவர் நேற்று முன்தினம் காலை 8.45 மணி முதல் மதியம் 12.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் இந்த கொலையை கணவர் மகேந்திரா தான் செய்து இருப்பார் என ஸ்வேதாவின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். எனவே இந்த கொலையில் மகேந்திராவுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளியை கண்டுபிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்